Categories
தேசிய செய்திகள்

வெறும் ஐந்தே நாளில்…. 1.24 லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்க…. ரகசியம் இது தான்…!!

பட்ஜெட் தாக்கல் காரணமாக எஸ்பிஐ வங்கியின் பங்கு அதிகரித்துள்ளதால் பங்கு வாங்கிய முதலீட்டாளர்களுக்கு அதிகமான பணம் கிடைக்கிறது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் பங்கு விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் எஸ்பிஐயின் முதலீட்டாளர்கள் அதிகமாக பணம் பார்த்துவிட்டனர். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஒவ்வொரு எஸ்பிஐ வங்கியின் பங்கும் குறைந்தது 124 ரூபாய் உயர்ந்துள்ளது.

இணர் 11ஆம் தேதியன்று எஸ்பிஐ பங்குகள் 284 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து 5 ஆம் தேதி இரண்டு மடங்காக  பங்கு 408 ஆக உயர்ந்துவிட்டது. இதுவே ஒரு பங்கு 124 ரூபாய் நேரடி லாபம் கிடைத்தது. இதுபோன்ற சூழலில் ஆயிரம் பங்கு வாங்கியிருந்த ஒரு முதலீட்டாளருக்கு 1.24 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றிருக்க முடிந்திருக்கும். அதுவும் வெறும் ஐந்து நாட்களில். 1 முதல் 5 நாட்களில் பங்கின் விலை 42% உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் எஸ்பிஐ பங்கு விலை 560 ரூபாய் மேலும் உயரும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |