அதிகாலையில் பச்சை பசேலென காணப்படும் பொருட்களின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடு மேடு கற்கள் என பல பகுதிகளில் நடந்து சென்றனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. ஆனால் வீட்டுக்குள்ளேயே தற்போது காலணியை அணிந்து நடக்கும் கொடுமை நடந்து வருகிறது. வீட்டிற்குள் ஒரு காலனி, வெளியே செல்வதற்கு ஒரு காலனி என்று அனைவரும் பயன்படுத்துகின்றனர். வெறும் கால்களில் நடப்பதால் மன அழுத்தம் குறையும் என்று இங்கு பலருக்கு தெரியவில்லை.
நிலத்தில் நாம் காலூன்றி காலணிகள் இல்லாமல் இருப்பதால் உடலில் சாதாரணமாக உள்ள நீரை விட 70 விழுக்காடு நீர் அதிக அளவு சுரக்குமாம். பாதத்திற்கு அடியில் உள்ள விரல்கள் முதல் கால் வரை நரம்பு, மூளை, இருதயம் ,சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளுக்கும் நேரடியாக தொடர்பு கொண்டது நமது பாதங்கள்.
வெறும் காலில் ஓடுவது, சிறிது நேரம் நடப்பது நமது ரத்த ஓட்டத்திற்கும் ஆரோக்கியம் மிகுந்த வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. கரடுமுரடான பகுதிகளில் வெறும் கால்களில் நடப்பதால் பாதத்திற்கு நேரடி அழுத்தம் கிடைத்து உடல் செயல்களை ஊக்குவிக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கின்றது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். கண் பார்வையை கூர்மையாக்கும். பச்சை பசேலென இருக்கும் புல்வெளியில் வெறும் கால்களில் நடந்தால் மிகவும் நல்லது.