தமிழக அரசானது ஆன்லைன் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. டெல்டா விவசாயிகள் பலரும் இந்த நடைமுறைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா எண் கூட தெரியாத நிலையில், அவர்களால் எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலும்.
இது மிகவும் சாத்தியமற்ற செயலாகும். இதுகுறித்து அண்ணா மக்கள் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழக அரசானது விவசாயிகளை அங்கும் இங்கும் ஊசலாட வைக்கும் விதமாக இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது. எனவே அரசு உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். மேலும் அரசானது போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காத காரணத்தினால் பெரும் கஷ்டமும், நஷ்டமும் பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இதனை கருத்திற்கொண்டு திமுக அரசானது விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யும் செயல் முறையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அரசு இதற்கு மாறாக விவசாயிகளை தண்டிக்கும் விதமாக புதிய நடைமுறையானது கொண்டுவரப்பட்டுள்ளது. இது கண்டிக்கத் தக்க விஷயமாகும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று வெறும் பேச்சுக்காக போட்டால் மட்டும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க இயலாது”என்று பதிவிட்டுருந்தார்.