பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை வாங்க தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு, தேனி சிட்கோ தொழில் பேட்டையில் பேட்டரியில் இயங்கும் ”வைக் பைக்” என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார் வினோத்.
மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சி தரும் இந்த இரு சக்கர வாகனங்கள் இயங்க பெட்ரோல் தேவை இல்லை. பேட்டரிகளை கொண்டு இயங்குவதால் இதற்கு சார்ஜ் ஏற்ற வெறும் 10 ரூபாய் செலவு செய்தாலே போதும் என்கிறார்கள் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள்.
இரு சக்கர வாகனத்தை வாங்க பதிவு எண், ஓட்டுனர் உரிமம் கூட தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. மாத ஊதியத்தில் பாதியை உரிந்து கொள்ளும் பெட்ரோலுக்கு முழுக்கு போடும் வாகனத்திற்கு, அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
சராசரி வாகனத்தில் இருந்து வரும் சத்தம், புகை போன்றவை கூட இல்லாததால் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாகனமாக திகழ்கிலின் வாசனை கூட நுகராத வடிவமைப்பாக கிடைத்திருக்கிறது.