பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை நம் உணவில் எடுத்துக் கொள்வதே கிடையாது. பலரும் துரித உணவுகளையே விரும்பி உண்டு வருகின்றனர். ஆனால் காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும்.
இதில் இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
காய்கறிகளில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்துமே குணமாகும்.
உடல் சூட்டை தணிக்க இது உதவுகிறது. சிறுநீர் வியாதிகளை நீக்குகிறது. பூசணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வரும்போது உடல்வலி தீரும்.
இதில் முக்கிய பலன் என்ன என்றால் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் இந்த காயை சாப்பிட்டு வர அவர்கள் படிப்படியாக குணமடைவார்கள்.
வெள்ளை பூசணிக்காயை 300 மில்லி எடுத்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தலைசுற்றல் தீராத தாகம் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது.
பூசணிக்காயின் விதையை சேகரித்து அதை நன்கு காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் தீரும். உடல் சூட்டை தணிக்கும். பித்த நோயை கட்டுபடுத்தும்.