சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களிடையே பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்ற ஆதங்கமும், உணர்வும் மிகப் பெரிய உத்வேகத்தை நம்முடைய கட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தி, அவர்களின் எண்ணங்களில் மிகப்பெரிய அளவில் பெரிய தாக்கத்தை உருவாக்கி, ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என உணர்த்துகின்றது.
தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் நம் பக்கம்தான் என்றைக்கும் இருக்கின்றார் என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சார நிர்வாகிகளான கூட்டத்தில் நேற்று கான முடிந்தது. அவ்வளவு எழுச்சியோடு நம்முடைய கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் தேர்தல் களத்திலே பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். சமுதாய சீர்திருத்தத்துக்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள், தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நடப்பதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், ஏழைதாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்.
இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு அறிவு ஆற்றல் ஆகிய குணங்களைக் கொண்ட ஒரே தலைவராக நம்முடைய இதயம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாதான் இருந்தார்கள் என்பதனை நம் வரலாற்ற்றில் கண்கூடாக காண்கின்றோம். மாண்புமிகு அம்மாவுடைய தலைமையில் அவருடைய தொண்டர்களில் ஒருவராக பணியாற்றுவதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு என்ற நிலையை நாம் பெற்றிருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.