முன்னணி நடிகரான சல்மான்கான் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார்.
இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ஷர்மாவிடம் உரையாடினார். இந்த நிகழ்ச்சின் போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதை ஒன்றை கூறினார் .
சிறு வயதில் டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் சைக்கிள் கடைகாரரிடம் எனது சைக்கிளை ரிப்பேர் செய்ய சொன்னேன். அந்த வேலைக்கான பணத்தை பின்னர் தருவதாக சொன்னேன் . அப்புறம் நன் மறந்து விட்டேன்.
மறுபடியும் என்னுடைய சைக்கிள் டயரை சரி செய்ய மீண்டும் அவரிடம் சென்றேன் . அப்போது அவர் ஏற்கனவே சைக்கிளை ரிப்பேர் செய்த வேளைக்கு பணம் தரவில்லை . நீங்கள் ரூ 1. 25 பைசா பழைய பாக்கி தரவேண்டும் என்று சொன்னார் .எனக்கு அந்தநேரம் சூழ்நிலை கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் நான் தர வேண்டிய பாக்கியை அவரிடம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்.