இந்திய மக்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது, பணப் பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் பான் கார்டு மிக அவசியமான ஆவணம். பான் கார்டு திடீரென்று தொலைந்து விட்டால் சில அத்தியாவசிய பணிகளை முடிப்பது சிரமம். அப்படி தொலைந்தால் இனி கவலை வேண்டாம், வெறும் பத்து நிமிடங்களில் நீங்கள் ஆதார் கார்டு வாங்கி விடலாம். இ- பான் கார்டுஎனப்படும் டிஜிட்டல் ஆதார் கார்டை சில நிமிடங்களிலேயே டவுன்லோட் செய்து விடலாம். அதற்கான வழிமுறைகள் இதோ…
முதலில் NSDL இணையதளத்திற்கு இ-பான் கார்டு பிரிவுக்கு செல்லவும். அதற்கு இந்த (https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html) இணைப்பை கிளிக் செய்யவும்.
* அதில் download e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* உங்கள் பான் எண்ணை பதிவிடவும்
* பின்னர் ஆதார் எண்ணை பதிவிடவும்
* பிறந்த தேதியை பதிவிடவும்
* உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும்
* OTP பதிவு செய்து Confirm செய்யவும்.
* பிறகு கட்டணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் 8.26 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
* இப்போது நீங்கள் இ-பான் கார்டு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
* பான் கார்டு PDF ஆவணத்தை திறக்க password வேண்டும். உங்களது பிறந்த தினம் தான் password என்பதை நினைவில் கொள்க.