Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 நிமிடத்தில்…. வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் கார்டு வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…..!!!!

நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். இது ஒரு முக்கிய ஆவணம். இது இல்லாமல் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் நம்மால் பெற முடியாது. ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த வருடம் PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் அதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். இதுவரை ஆதார் அட்டை காகிதம் மூலமாக அச்சிடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தற்போது ஆதார் அட்டையில் டிஜிட்டல் வடிவத்திற்கு UIDAI ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன்படி ஆதார் அட்டையை நமது மொபைல் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதனை தேவைப்படும்போது பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஆதார் அட்டைக்கு பிசிகல் அட்டையை போலவே அனைத்து அங்கீகாரமும் கிடைக்கும். ஒரே மொபைல் என்னுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் அட்டை எண் உருவாக்கலாம். அதன் அளவை ஏடிஎம் டெபிட் கார்டு போன்றுதான் இருக்கும். அதனை எளிதாக பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு வெறும் 50 ரூபாய் என்ற சிறிய கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே போதும்.

PVC ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நீங்கள் பிவிசி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், UIDAI என்ற வலைத்தளமான uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்தில் அதை செய்ய வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டை எண், மெய்நிகர் அடையாள எண் அல்லது பதிவு எண் ஆகியவற்றை அதில் உள்ளிட வேண்டும். அதன்பிறகு 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Categories

Tech |