Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 ரூபாய்க்காக நண்பனை கொன்ற 20 வயது இளைஞர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய் காக தன்னுடைய நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அருகே இருந்த காட்டிற்குள் சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே ஒரு நாள் போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டுள்ளான். ஆனால் அவன் தன்னிடம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் கற்களால் அடித்து அவனை கொலை செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வெறும் பத்து ரூபாய்க்காக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |