ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை விமானம் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏர் ஏசியா நிறுவனம் மலிவான விமான பயண சலுகையை அறிவித்துள்ளது. அதன் மூலமாக வெறும் 1499 ரூபாய்க்கு விமான டிக்கெட்டை முன் பதிவு செய்து விமானத்தில் பயணிக்கலாம். ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 31 வரை எந்த நேரத்திலும் நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் பயணிக்க முடியும். இதன் கீழ் குறைந்த விலையில் விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் “பே டே சேல்”என்ற திட்டத்தின் கீழ் 1499 ரூபாய்க்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் வசதியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஜூலை 31ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே இன்று ஒரு மட்டுமே அவகாசம் உள்ளது. airasia.co.in என்ற இணையதளத்தில் சிக்கன் முன் பதிவு செய்யலாம். ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தால் பல நன்மைகளை பெற முடியும். Tata neuசெயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டணத்தில் தள்ளுபடி மட்டுமல்லாமல் 5% சலுகையும் உங்களுக்கு கிடைக்கும்.