திண்டுக்கல்லில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதனை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டிற்கு தக்காளி பெட்டிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் இதனை வாங்க வர்த்தகர்களோ அல்லது மகளோ ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிக அளவில் வந்து குவிந்துள்ள நிலையில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சி நஷ்டம் ஏற்படுத்திய வேதனையில் விவசாயிகள் தங்களுடன் கொண்டு வந்த தக்காளி பெட்டிகளில் இருந்து அவற்றை சாலையில் கொட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர். தக்காளி விளைச்சல் அமோகம் அதில் இருந்த போதிலும் அதற்கான விற்பனை விலை குறைவாக இருப்பது அவற்றைப் பயிர் செய்பவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தக்காளிகளை அரசே கொள்முதல் செய்து வேறு வகையில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.