இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மில் சிறியவர்கள் முதல் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது சந்தையில் வரும் புது மாடல் போன்களை வாங்கி வருகின்றனர். இதனால் பல நிறுவனங்களும் புது போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஐடெல் நிறுவனம் மேஜிக்2 4ஜி பீச்சர் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் வைபை, டூயல் 4ஜி வோல்ட், 1.3 எம்.பி பிரைமரி கேமரா, வயர்லெஸ் எப்.எம், 1900 எம்ஏஎச் பேட்டரி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 9 மொழிகளிள் பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.2349 ஆகும்.