Categories
தேசிய செய்திகள்

வெறும் 30 நாட்களில்…. வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா…? இதை பார்த்து உடனே அப்ளை பண்ணுங்க…!!

வாக்காளர் அடையாள அட்டையை நாமே எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1.விண்ணப்பதாரரின் புகைப்படம்

2.முகவரி சான்று: வங்கி கணக்கு புத்தகம், விவசாயி அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம், வருமான வரி தாக்கல் செய்த ஆவணம், சமீபத்திய வாடகை ஒப்பந்தம், அல்லது விண்ணப்பதாரர்களுக்கு பெற்றோர் போன்ற நேரடியான உறவுகளின் பெயரில் உள்ள தண்ணீர்/தொலைபேசி/மின்சாரம்/எரிவாயு கட்டண ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்று.

3.அடையாளச் சான்று: பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பான் கார்டு, ஆதார் கார்டு.

விண்ணப்பிக்கும் முறை:

1.முதலில் www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு சென்று “Apply Online For Registration Of New Voter / due to shifting from AC  என்ற லிங்கை கிளிக் செய்யவும். அல்லது நேரடியாக http://www.nvsp.in/Forms/Forms/Forms6 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

2.இதில் மொழியை தேர்வு செய்து பெயர், வயது, முகவரி போன்ற தேவையான அனைத்து தகவலையும் உள்ளிட வேண்டும். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3.உள்ளீடு செய்த தகவல்களை மீண்டும் சரி பார்த்த பின்பு சமர்ப்பிப்பு(Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே ஈமெயிலில் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

இதையடுத்து விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் உங்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு கிடைத்துவிடும்.

Categories

Tech |