இந்தியர்களுக்கு மிகமுக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக பான் கார்டு உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல் பல்வேறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுகிறது. எனவே ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பான் கார்டு இணைப்பது இந்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. வருமான வரித் துறையால் இந்த பான் கார்டு வழங்கப்படுகிறது. இது ஏடிஎம் கார்டு போன்று பிளாஸ்டிக் வடிவிலான கார்டு தான். ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால் பான் கார்டு ஆன்லைன் மூலமாக எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்த பான் கார்டு நகலை ஆன்லைன் மூலமாக நீங்களே டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதற்கு https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். உள்ளே சென்றதும் பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து ஆதார் சரிபார்ப்புக்கு ‘tick’ கொடுத்து கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.
இப்போது உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு டவுன்லோடு கொடுத்தால் உங்களுடைய பான் கார்டு PDF வடிவில் டவுன்லோடு ஆகிவிடும்.