Categories
பல்சுவை

வெறும் 5 நிமிடம் போதும்…. வங்கி கணக்கில் மொபைல் எண்ணை ஈஸியா மாற்றலாம்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் மொபைல் நம்பர் மிகவும் அவசியம். வங்கி தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ள மொபைல் எண் மிக முக்கியமானது. சிலர் திடீரென்று மொபைல் எண்ணை மாற்றி விட்டால், வங்கியில் உள்ள மொபைல் நம்பரையும் உடனே மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் வங்கிக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. இனி வீட்டில் இருந்தவாரே இதனை செய்து முடிக்கலாம். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தி உங்களது மொபைல், லேப்டாப் அல்லது வீட்டில் உள்ள கணினி மூலமாக வங்கி கணக்கின் மொபைல் நம்பரை மாற்றலாம். அதற்கு உதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் வெப்சைட் www.onlinesbi.com என்பதில் உள்ளே நுழைந்து, personal data என்பதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் செய்ய வேண்டும்.

உள்ளே சென்றதும் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி இருக்கும். அதில் நீங்கள் உங்கள் மொபைல் நம்பரை மாற்ற முடியும். ஏடிஎம் மூலமாக மாற்றுவதாக இருந்தால் ஏடிஎம் மிஷினில் உங்களது PIN நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். அதன்பிறகு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்பிறகு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை நீங்கள் ஏடிஎம்மில் உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்களிடம் புதிய எண் கேட்கும். புதிய நம்பரை பதிவிட்டு உறுதி செய்தால் நம்பர் மாறிவிடும்.

Categories

Tech |