Categories
அரசியல்

வெறும் 7 நாள் ரிசல்ட்… தலைகீழாக மாறியது…. ஆட்டம் காணும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 119 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  மட்டும் 65,189 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 24 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் சென்னை நிலவரத்தால் 66நாட்களுக்கு பிறகு அரசு நிம்மதி அடைந்துள்ளது. ஆம் கடைசியாக ஜூன் 3ஆம் தேதி 1012ஆக பாதிப்பு உயர தொடங்கிய நிலையில் நேற்று தான் ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து உயிரிழப்பபு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பது அரசுக்கும், மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே செ ல்வது மகிழ்ச்சி அளிக்கும்  சூழலில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இறப்பு பதிவாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாக இறப்பு  அதிகமாக பதிவாகி மக்களை மிரட்டி வருகிறது. எப்படி சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததோ… அதேபோல இறப்பையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடந்த 7 நாட்களில் 755பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.

Categories

Tech |