Categories
அரசியல்

வெறும் 8பேரை 435ஆக மாற்றிய… சாதனையை சொல்லி….. எடப்பாடி வாக்கு சேகரிப்பு ….!!

அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்த அரசாங்கம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசாங்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு நீட் தேர்வில் யாரு பாதிக்கிறார்கள் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்த மாவட்டத்தை போல….  தமிழ்நாட்டில் இருக்கின்ற பல மாவட்டங்களில் இருக்கின்ற கிராமப்புற மாணவர்கள்,  ஏழை குடும்பத்திலேயே பிறந்த மாணவர்கள்,  அவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களோடு போட்டிபோட்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறமுடிவதில்லை. இதனால் அவர்களுக்கு மருத்துவர் ஆக முடியவில்லை. பல் மருத்துவர் ஆக முடியல.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால்….  இதையெல்லாம் நாங்கள் சிந்தித்து சிந்தித்து நான் முதலமைச்சர் ஆக இருந்தபோது மாண்புமிகு அம்மாவின் அரசு இன்றைக்கு கிராமப்புற மாணவர்களும் மருத்துவர் ஆக வேண்டும், கிராமப்புற மாணவர்களும் பல் மருத்துவர் ஆக வேண்டும், அதற்காக மூத்த அமைச்சரோடு கலந்து பேசினோம்.

இங்கே இருக்கின்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரோடு கலந்து பேசினோம், மூத்த தலைவர்களோடு கலந்து பேசினோம், வழக்கறிஞர்களோடு கலந்து பேசினோம் அவர்கள் சொன்னார்கள் இதற்க்கு வழி இருக்கின்றது.   அரசு பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்கள், ஏழை குடும்பத்திலே பிறந்த அரசு பள்ளியிலேயே படிகின்ற மாணவர்களும் மருத்துவர்கள் ஆகலாம், பல் மருத்துவர்கள் ஆகலாம் அந்த வழிமுறைகளை சொன்னார்கள்.

அந்த வழிமுறையை பின்பற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் மரியாதைக்குரிய கலையரசன் தலைமையிலேயே நாம் ஒரு கமிசன் அமைத்து, அந்த அறிக்கையின்படி 7.5% உள்ஒதுக்கீடை கொண்டு வந்து சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு ஏழை எளிய குடும்பத்திலேயே பிறந்த மாணவ – மாணவிகள்…. அரசு பள்ளியிலேயே படித்த மாணவ – மாணவிகள் 435 பேர் மருத்துவர் ஆனார்கள், பல் மருத்துவர் ஆனார்கள்.

கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு நீட் தேர்விலே அரசு பள்ளியிலேயே படித்த மாணவர்கள் வெறும் 8 பேர் தான்  MBBSக்கு போனார்கள், மருத்துவர் ஆனார்கள். மொத்த சீட்டு 2 வருடத்திற்கு முன்பு 3,200 இடம் இருக்கிறது மருத்துவ இடம்…  3,200 மருத்துவ இடத்திலே 40% அரசு பள்ளிகளிலேயே படிகின்ற ஏழை எளிய மாணவ மாணவிகளில் 8 பேர் தான் போனார்கள். நானும் அரசு பள்ளியிலேயே படித்தவன்.

அதே அரசு பள்ளியில் படிகின்ற பெரும்பாலான மாணவ மாணவிகள் ஏழை எளிய குடும்பத்திலேயே பிறந்தவர்கள்,  விவசாய குழந்தைகள்,  விவசாய தொழிலாளிகளின் குழந்தைகள்,  ஏழை தொழிலாளர்களுடைய குழந்தைகள் தான் அதிகமாக அரசு பள்ளிகளிலேயே படிகின்றார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுடைய நலன் கருதி மாண்புமிகு அம்மாவினுடைய அரசு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு 7.5% உள்ஒதுக்கீடை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு,  அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்த அரசாங்கம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசாங்கம்.

Categories

Tech |