தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெற்றது. அதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள்ளரங்கில் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.