நேற்றைய போட்டிக்கு பிறகு அனைத்து ரசிகர்களையும் ரோஹித் சர்மா சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 44 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களும் குவித்தனர். பின்னர் 192 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.. ஆவேஷ் கான், அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மா அந்த மைதானத்தில் இருந்தவர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார்.. அதாவது, ஹிட் மேன் மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு கை கொடுத்து சென்றார்… அதில் ஒரு சில ரசிகர்கள் அந்த தடுப்பை தாண்டி வந்து அவருடன் செல்பி எடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
You'll mock him on twitter, and he'll keep winning hearts of people. @ImRo45 ❤️🔥 pic.twitter.com/2LWmWMg7Fi
— ANSHUMAN🚩 (@AvengerReturns) August 7, 2022
https://twitter.com/bebaslachara_/status/1556172884380459008
One question to ask all those fans;
How does it feel to live my dream? 🥺💓#RohitSharma pic.twitter.com/jci6IOFe1G
— edgedandtaken (@Blair_Waldorf45) August 6, 2022