தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி, தன் தந்தை ஸ்டாலினிற்கு AIIMS என்று குறிப்பிடப்பட்ட ஒரு செங்கலை வழங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பிற்பகல் 3:50 மணியளவில் திமுக கூட்டணி சுமார் 149 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதில் விளாத்திகுளம், சேப்பாக்கம், கிள்ளியூர் மற்றும் வந்தவாசி போன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
#DMKwinsTN #AIIMS #TNwithDMK pic.twitter.com/da6aF5k6qW
— Udhay (@Udhaystalin) May 2, 2021
இந்நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளரான, உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தொடக்கத்திலிருந்தே மிக அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்ததைத்தொடர்ந்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தன் தந்தையான, திமுக தலைவர் ஸ்டாலிக்கு AIIMS என்று குறிப்பிடப்பட்ட ஒரு செங்கலை வழங்கினார். இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் தான் நட்டதாக தெரிவித்தார். அது தான் அவர் வெற்றி பெற காரணமாக அமைந்தது. எனவே அதனை நினைவுக்கூறும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செங்கல் வழங்கியுள்ளார்.