Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கும் விக்ரம்”…. சியான் 62 குறித்து வெளியான தகவல்….!!!!!!

விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.

கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து தற்போது படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா ரிலீஸ் ஆகும்.

விக்ரமின் சமீபத்திய திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறாததால் ஒரு மெகா ஹிட் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றார். அதனால் கோப்ரா திரைப்படம் வெற்றியை பெற்று தரும் என நம்பி இருக்கின்றார். இதையடுத்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விக்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது.

இந்த நிலையில் அடுத்தடுத்து தன் திரைப்படங்கள் ரிலீசாக இருப்பதால் விக்ரம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார். இதை அடுத்து பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். கோப்ரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என நம்பிக்கையில் இருக்கும் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க போவதாக நேற்று ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது கூறியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரமின் அடுத்தடுத்து திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் மீண்டும் தொடர் வெற்றிகளை விக்ரம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |