Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெற்றிமாறனின் அசுரன்… இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்… அடேங்கப்பா இத்தனை கோடியா…???

தனுஷ் நடிப்பில் 2019 ஆம் வருடம் வெளிவந்த அசுரன் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2019 ஆம் வருடம் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி ஹிட்டானது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2019 க்கான சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது அசுரன். இந்நிலையில் அசுரன் படத்திற்காக தனுஷ் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது பற்றி செய்தி வெளியாகி உள்ளது. அசுரன் படத்துக்காக தனுஷ் ரூபாய் 12 கோடி பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |