தமிழ் திரை உலகில் தனது நடிப்பை போல, சிறந்த ஒரு பாடகியாகவும் ஜொலித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் பிசாசு 2 என்கின்ற படம் தற்போது உருவாகி ,ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
எனவே இதனை தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்குனர் மிஸ்கின் தீவிரமாக செயல்பட்டு, இப்படத்தை முடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையானது ஆண்ட்ரியாவை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் பூர்ணா, ராஜ்குமார், பிச்சுமணி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படமானது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ‘அனல் மேலே பனித்துளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டநிலையில், இந்தப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா தற்போது அவரது தயாரிப்பில் இப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.