இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுவிட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் மாபியா திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தை எதனால் எடுத்தேன் என்ன சூழ்நிலையில் எடுத்தேன் என்பது குறித்து பேசிய இயக்குனர் கார்த்திக் நரேன் ‘துருவங்கள் பதினாறு படம் வெற்றி பெற்றவுடன் எடுக்கப்பட்ட நரகாசுரன் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே சென்றதால் எப்படியாவது ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் என அவசர அவசரமாக மாபியா படத்தை எடுத்தேன். இந்த படத்தை உருவாக்குவதற்கு முன் இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு ஒரு அறிவுரையை கொடுத்திருந்தார் . ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் அவசரத்தில் ஓடக் கூடாது, படம் லேட்டானாலும் தரமான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால் நான் அதை பின்பற்றவில்லை’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் .