சென்னையில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உ உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
Categories