Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன்- ராகவா லாரன்ஸ் இணையும் ‘அதிகாரம்’… சூப்பர் அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்…!!!

அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் எழுதியுள்ள கதையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் .

இந்நிலையில் அதிகாரம் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுகள்  வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |