Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி கொடி ஏந்தி…. வெல்வோம் தமிழகம்….. வாக்களிப்பீர் தாமரைக்கே…. தமிழக பாஜக ட்விட் …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகி இருந்தது.

இதில் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு 20தொகுதிகளும், நாடாளுமன்ற மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி ஆதரவோடு பாஜக போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெற்றி கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம், வாக்களிப்பீர் தாமரைக்கே என பதிவிட்டுள்ளது.

Categories

Tech |