Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய ஹர்சல் படேல்…. திடீரென வந்த துக்க செய்தி….!!!!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 18-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. இதன்மூலமாக  பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேலின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் அவர் துல்லியமாக பந்து வீசியுள்ளார். சூர்ய குமாரை வைத்து ரன்கள் எடுக்க முடியாமல் திணற வைத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த ஹர்சல் படேலுக்கு ஒரு துக்க செய்தி வந்துள்ளது. அவரது சகோதரி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் பயோ-பப்பில் இருந்து வெளியேறினார். அவர் வீரர்கள் செல்லும் பேருந்தில் செல்லாமல் தனியாக புறப்பட்டார் என ஐபிஎல் வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 12-ந் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |