Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற இளம் வேட்பாளர்….. புதிய பெண் கவுன்சிலர்…. குவியும் பாராட்டுகள்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் எம்.ஏ பட்டதாரியான நர்மதா என்ற இளம்பெண் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு அகாடமியில் ஐ.ஏ.எஸ் படிப்பில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இதே வார்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் 611 வாக்குகள் பெற்று நர்மதா வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி நகராட்சியில் 24 வயதுடைய இளம் பட்டதாரி பெண் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

Categories

Tech |