சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தி.மு.க.வினர் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டியில் உலகம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுகுடிபட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், திருவாழ்ந்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாதவன் மற்றும் சிலர் திமுக கட்சியின் வெற்றியை தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
அதனை தொடர்ந்து செந்தில்குமார், மாதவன் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி காவல்துறையினர் தடையை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.