திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
Categories