Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’… ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட நிஷாவை  அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முதலாவதாக சனிக்கிழமை எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து நேற்றைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கண்ணீரோடு அவரை வழியனுப்பி வைத்தனர் . ஆனால் நிஷாவின் குடும்பத்தினர் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர்.

காரிலிருந்து இறங்கி வந்த நிஷாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆராத்தி எடுத்தபின் அருகில் நின்று கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார் நிஷா . அவரது வீட்டில் ‘வெல்கம் டு அறந்தாங்கி நிஷா’ என்ற வாசகம் கொண்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியோடு குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |