பொங்கல் பரிசு பொருட்கள் தரமானதாக இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் வாங்கியதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் திமுக. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் சரியானதுதானா.?
பொங்கலை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், 2022-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளுக்கு துணிப் பையுடன் கூடிய வெறும் 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் காணப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையடுத்து, நானும் அந்தக் குளறுபடிகள எனது அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டினேன். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளை சமைத்து சாப்பிட்டதில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட குறைகளில் துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஒப்புக் கொண்டுவிட்டது.
மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. . எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.” எனக் கூறினார்.
அவர் இதுகுறித்து கூறும்போது, , 21 பொருட்கள் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 18 பொருட்கள் மட்டுமே கொடுப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இரண்டரை டன் வெல்லம் மோசமாக இருக்கின்றது. சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் வெல்லமானது தரமற்று இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களே பொருட்கள் எடை குறைவாக இருப்பதாக போராட்டம் நடத்தியுள்ளனர். தரமற்ற பொருட்களால், மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுப்பொருட்களை அரசு தரமானதாக வழங்க வேண்டும். மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கக்கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.