Categories
திருச்சி திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இறந்த 2 தமிழர்களின் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு..!!

வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடல்களை கொண்டு வருவதற்கான செலவை இந்திய தூதரகமும், தமிழ் சங்கங்களும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக உடல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு சார்பில்  வெளிநாடு வாழ் நலத்துறை இணையதளத்தில் முதலில் தமிழக அரசு சார்பில் பதிவு செய்வார்கள்.. அதன்பின் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகம், டெல்லியில் இருக்கக்கூடிய தூதரக அதிகாரிகளும் ஒருவர் பேசி கொண்டு ஏற்பாடுகளை சொல்லி இருக்கிறார்கள்.. அதுமட்டுமில்லாமல் எந்த நாட்டில் இறந்தார்களோ அந்த நாட்டில் தூதரகத்தில் ஒரு தொகை இருக்கும்.. இது போன்ற செலவினங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிடு செய்துள்ள நிதியிலிருந்து தான் அந்த உடலை கொண்டு வருவார்கள்.. அங்கே இருக்கக்கூடிய தமிழ் சங்கங்களின் உதவிகளை பெற்று தான் உடல்கள் கொண்டு வரப்படும். கடந்த வாரம் தொடர் பண்டிகை ஓணம் பண்டிகை காரணமாக அலுவலகப் பணி சரிவர செய்ய முடியாத காரணத்தால் உடல்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரன் கடந்த 3ஆம் தேதி குவைத் சென்றிருக்கிறார். க்ளீனிங் பணி என பாலைவனத்தில் ஆடு மாடுகளை மேய்க்க வைத்து கொடுமைப்படுத்தியாக வீட்டில் புலம்பி இருக்கிறார். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.. பிறகு அவர் உயிரிழந்ததாக தனியார் ஏஜென்ட் நிறுவனம் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளது.. அதேபோல திருச்சி மாவட்டம் காவிரி பாளையத்தை சேர்ந்த 52 வயதான சின்னமுத்து புரவியான் 4 மாதங்களுக்கு முன்பு வெல்டர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்று இருந்தார்.

கடந்த புதன்கிழமை இரவன்று சின்னமுத்து தன்னுடைய மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியிலிருந்து போனில் பேசியுள்ளார். அடுத்த நாள் மனைவி அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின் அவரது நண்பரிடம் கேட்ட போது தான் உங்களின் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சவுதியிலிருந்து பேசிய சின்னமுத்துவின் நண்பர் உங்கள் கணவர்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |