Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மருத்துவ கல்வியை என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டர்  ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள் இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு அவர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி மருத்துவப்படி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு அனைவருக்கும் உகந்ததாக உக்ரைன், பல்கேரியா, ஜார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு ,மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ பல்கலைக் கழகங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது.

இப்படி வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படித்து இந்தியாவிற்கு வந்து தங்களை மருத்துவ தொழிலை சுயமாக தொடங்குவது மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்ற முடிவதில்லை.இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என மருத்துவ  அறிவியலுக்கான தேசிய வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி FMGE தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை https://nbe.edu.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூன் 30-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |