தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மயில்கல் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு எஸ்.பி வேலுமணியின் மகன் மனைவி உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணியுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2016 – 2021 வரையிலான காலக்கட்டத்தில் 58 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ். பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய செலவிட்ட தொகை குறித்த விபரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றதற்கு மட்டும் ரூ.1.25 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.