Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்…. இனி ரூ.10 லட்சம் வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கென வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும்.

இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்த அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி தற்போது நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உறவினர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்ப முடியும். இந்த அறிவிப்பு வெளிநாடு வால் இந்தியர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |