சென்னையை அடுத்த அம்பத்தூரில் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரகடத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற அந்த நபர் பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த ஏமாந்தவர்கள் என சொல்லப்படும் ஐந்து பேர் திலீப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது மனைவி தனது கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திலீப்குமாரை ஐந்து பேர் அழைத்து செல்லப்படும் சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.