இந்தியா முழுவதுமாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களும் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 45 வயதினருக்கு மட்டுமல்லாமல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு தடுப்பூசி போட்டு வருகின்றது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட், மாணவர் விசா, பல்கலைகழக சேர்க்கை கடிதம் ஆகியவற்றுடன்தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரம் பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக தடுப்பு மருந்து நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.