முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்வதால் அவருக்காக தனி விமானம் தயாராகியுள்ளது.
மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் முதல்வர் முக ஸ்டாலின் துபாய் செல்கிறார். முதல்வர் முக ஸ்டாலின்க்காக தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் மிகுந்த கவனத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்.
துபாய் எக்ஸ்போவில் இந்திய நாட்டின் சார்பில் தனி பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் இந்த எக்ஸ்போவில் தங்கள் மாநிலத்தின் சிறப்பு தொழில வாய்ப்புகள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளடக்கிய விளக்க காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். அந்த வகையில் தான் தமிழகத்தின் சிறப்பினை உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாட்டில் சார்பிலும் ஒரு அரங்கினை துபாய் எக்ஸ்போவில் வைக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் இடம் தமிழக அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கொடுத்துள்ளனர்.
அதற்கு முதல்வர் சம்மதம் சொன்னதால் வரும் 24 ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழக அரசு சார்பில் ஒரு அரங்கு செயல்பட இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு பெலிவியம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்போவை பார்வையிடுகிறார். அதன்பின் துபாய் தொழில் முனைவோருடன் கருத்தரங்கம் ஒன்றிலும் பங்கேற்க இருக்கிறார். அதன் பின்னர் உலகம் முழுவதும் இருந்து இந்த காட்சியை காண வந்திருக்கும் தொழிலதிபர்களுடன் கலந்து பேசி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த இருக்கிறார்.