‘வலிமை’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்தி கேயா வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது.
மீதமுள்ள ஒரு சண்டைக்காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா விதிமுறைகளால் வெளிநாடு செல்ல படக்குழுவுக்கு அனுமதி கிடைக்கவில்லை . இந்நிலையில் வெளிநாட்டில் எடுக்க வேண்டிய அந்த சண்டைக் காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்க வலிமை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சியை படமாக்கிவிட்டால் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.