Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாடு செல்ல தயாரான வாலிபர்…. கடற்கரையில் ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காருண்யாபுரம் கடற்கரையில் ஒரு வாலிபரின் சடலம் கரை ஓதுங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியிலுள்ள மீனவர்கள் குளச்சல் கடலோர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் குளச்சல் பகுதியில் வசித்து வந்த அப்ரா சுதீன் என்பது தெரியவந்துள்ளது. இவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு தயாராகி வந்த நிலையில் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் சாவுக்கான காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |