Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களே…. ஆதார் அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…..!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதன் படி, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

NRI மக்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் விவரங்களில் கண்டிப்பாக இந்திய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் அட்டையில் சர்வதேச எண்களுக்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. எனவே NRI-களுக்கு இந்திய மொபைல் எண் இருப்பது அவசியமாகும்.

NRI-க்களின் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை

1. ஒரு NRI, தனது குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்க விரும்பினால், UIDAI-யின் இந்த விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

2. குழந்தை என்ஆர்ஐ ஆக இருந்தால், அவருக்கு முறையான இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டியது அவசியமாகும்.
3. குழந்தை இந்திய குடிமகனாக இருந்தால், பெற்றோருடனான உறவுக்கு சான்றாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
4. இது தவிர, குழந்தையின் சார்பாக தாய் அல்லது தந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆதார் அட்டைக்கு NRI விண்ணப்பிக்கும் முறை

1. NRI ஆதார் அட்டையை உருவாக்கிக்கொள்ள, முதலில் அருகில் உள்ள ஒரு ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டும்.
2. உங்களுடன் உங்களது இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவும்.
3. அதன் பிறகு அனைத்து விவரங்களையும் பதிவு படிவத்தில் நிரப்பவும்.
4. ஆதார் பதிவு செய்ய மின்னஞ்சல் ஐடி அவசியமாகும்.
5. பதிவு படிவத்தை கவனமாக படித்து டிக்லரேஷனில் கையெழுத்திடுங்கள்.
6. உங்களை ஒரு NRI ஆக பதிவு செய்யுமாறு உங்கள் ஆபரேட்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
7. உங்கள் பாஸ்போர்ட்டை உங்கள் அடையாள ஆவணமாக கொடுங்கள்.
8. பாஸ்போர்ட் உங்கள் முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணமாக செயல்படும்.
9. உங்கள் பயோமெட்ரிக் செயல்முறையை முடித்து, பதிவுச் சீட்டைப் பெறுங்கள்.
10. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் ஆதார் அட்டை உங்களுக்கு கிடைத்து விடும்.

Categories

Tech |