Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை…. பிரபல நாட்டில் அரசின் அதிரடி முடிவு….!!!!

கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா அரசு வீடுகள் விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையை குறைக்கும் விதமாக கனடாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2 வருடங்களுக்கு வீடு வாங்க தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவில் 2 வருடங்களுக்கு வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடையுடன், தங்கள் வீட்டை ஓராண்டுக்குள் விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், நிரந்தர உரிமம் பெற்றவர்களுக்கும் பல விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த வருடம் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்ததோடு, வீட்டு விலைகள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் சந்தையில் ஏற்பட்டுள்ள பரபரப்பை குறைக்க அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |