Categories
உலகசெய்திகள்

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ஜெர்மனியர்கள் சுட்டுக் கொலை…ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!!

அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கின்றனர்.

அதில் ஜெர்மனியில் ஒருவர் அங்கே உயிரிழந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த விஷயம் தென்னாப்பிரிக்காவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்க காவல்துறை அமைச்சரான lindiwe sisulu இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து உள்ளது மட்டுமல்லாமல் உயிரிழந்த ஜெர்மனியக் குடும்பத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து தென்னாபிரிக்கா எந்த அளவிற்கு அழகான இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெயர் பெற்றது. அதேபோல் அங்கு வேலையில்லா திண்டாட்டமும் அதிக அளவில் இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதார சமநிலையின்மையும் அங்கு பெருமளவில் காணப்படுகிறது. அதாவது செல்வந்தர்கள் செல்வந்தர்களாகிக்கொண்டே செல்கின்றார்கள் ஏழைகள் ஏழைகளாகிக்கொண்டே செல்கின்றார்கள்.

Categories

Tech |