Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு…. வெளியான நல்ல செய்தி…!!!

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு ரெட் லிஸ்ட் பயணப் பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் FCDO எனப்படும் வெளிநாட்டு காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து FCDO வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் சற்றே நீக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கிடையில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானங்கள் தொடர்ந்து இயங்கலாம். ஆனால் டிக்கெட் முன்பதிவு, முக்கியமான பயணம் வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு ஏர் லைன்ஸ் இணையத்தை அணுக வேண்டும். பயணத்தை தொடங்குவதற்கு முன்பதாக  ‘Entry Requirements’ என்ற பகுதியை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |