Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்ல பணம் இல்லை…. பிளாஸ்டிக் கவரால் மூடி…. தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்…!!

வாலிபர் ஒருவர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானாவில் மதுரா நகரில் வசிக்கும் ரெட்டி என்பவரின் மகன் சுமந்த் ரெட்டி(27). பி.டெக் படித்து முடித்துள்ள இவர் உயர்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்வதற்காக தனது பெற்றோரிடமும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் வேதனை அடைந்த சுமந்த் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோவைக்கு சென்றுள்ளார். அங்கு காந்திபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சுமந்த் தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரமாகியும் திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் காவல் துறையினருக்கு சந்தேகத்தின் பேரில் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு அவர் தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி மூச்சுத்திணறல் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சுமந்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |