நோபல் நாட்டில் இறந்த வாலிபரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியன் செல்போனை இந்திய வெளியுறவு துறையினர் தொடர்பு கொண்டு சதீஷ்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டி மற்றும் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சதீஷ்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.