சென்னை மாவட்டம், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு தபால் பிரிவுக்கு போதைப் பொருட்கள், கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதனையடுத்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சரக்கக பிரிவு ஆய்வு செய்தனர் .
அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது, 10 சிலந்திப் பூச்சிகள் போலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன என தெரியவந்துள்ளது. இதனை மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும்’ கொடிய வகை’ சிலந்திப் பூச்சிகள் என தெரிய வந்துள்ளன. இந்நிலையில் சிலந்திப்பூச்சி பார்சலை உடனடியாக போலந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.
இதேபோல் சென்னை முகவரில், 8 தபால்கள் வந்துள்ளன. அவை அமெரிக்கா நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளன என தெரியவந்தது. அவற்றில் அமெரிக்காவில் இருந்து வந்த 3 தபால் பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா 274 கிராம் இருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த பார்சலில் 92 கிராம் எடை அளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன.
இவையனைத்தும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பார்சலில் இருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு 10 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. பார்சலில் இருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என தெரிய வந்தன. சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சிலந்திப் பூச்சிகள், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்ததை குறித்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், அந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.